Thursday, June 19, 2008

விண்ணப்பம்

இறைவா நாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றை மன்னித்து எங்களுக்கு பேரின்ப வாழ்வு அளிக்க வேண்டுகிறோம்.

உழவாரப்பணி செய்த சிவாலயங்கள்

ஆரம்பம் முதல் இன்றுவரை நாங்கள் ஒவ்வொரு மாதமும் உழவாரப்பணி செய்த சிவாலயங்கள்..
1.திருவேங்கடம்
2.வெம்பக்கோட்டை
3.நாங்குநேரி
4.பாலவநத்தம்
5.வடக்குவிஜயநாராயணம்
6.சீவலப்பேரி
7.செய்துங்கநல்லூர்
8.கோவில்பட்டி
9.பத்தமடை
10.செங்கோட்டை
11.குருமலை
12.கருங்குளம்
13.கொங்காரயக்குறிச்சி
14.ஆழ்வார்குறிச்சி
15.சங்கரன்கோவில்
16.சிந்தாமணி
17.திருநெல்வேலி
18.செப்பறை
19.கங்கைகொண்டான்
20.இடைகால்
21.மாரந்தை
22.கோவில்பட்டி
23.திருஆலம்பொழில்(தஞ்சாவூர்)
24.அகரம்
25.நாணல்காடு
26.வானரமுட்டி
27.ஆய்குடி
28.சுரண்டை
29.சாம்பவர் வடகரை
30.மதுரை
31.கருங்குளம்
32.மணக்கரை
33.முத்தாலங்குறிச்சி
34.திருநெல்வேலி
35.மந்திதோப்பு
36.ஸ்ரீ யந்தூர்
37.வேடநத்தம்
38.சேரகுளம்
39.திருமங்களகுறிச்சி
40.கோவில்பட்டி
41.மூர்த்தீஸ்வரம்
42.மழவாரயநத்தம்
43.தருவை
44.சங்கானி
45.தென்காசி
46.கொங்காரயக்குறிச்சி
47.தென்காசி
48.தென்காசி (கீழபுலியூர்)
49.கிருஷ்ணாபுரம்
50.உத்திரகோஷமங்கை
51.முறப்பநாடு
52. தென்காசி
53.கோவில்பட்டி
54.கங்கைகொண்டான்
55.திருநெல்வேலி
56.கங்கைகொண்டான்
57.கங்கைகொண்டான்
58.திருஅஞ்சைகளம்
59.குமரரெட்டியாபுரம்
60.வைப்பார்
61.திருநெல்வேலி
62.நென்மேனி
63.செப்பறை
64.குறும்பூர்
65.காரசேரி
66.மானூர்
67 நம்பியாபுரம்
68.கன்னியாகுமரி
69.திருநெல்வேலி
70.திருஅஞ்சைகளம்
71.மானூர்
72.வானரமுட்டி
73.திருச்செந்தூர்
74.மணிமூர்த்தீஸ்வரம்
75.செப்பறை
76.வெல்லூர்
77.உடையார்பட்டி
78.அம்பாசமுத்திரம்
79.அம்பாசமுத்திரம்
80.அம்பாசமுத்திரம்
81.திருநெல்வேலி
82.அம்பாசமுத்திரம்
83.கங்கைகொண்டான்
84.காரசேரி
85.சுசீந்திரம்
86.கிருஷ்ணாபுரம்
87. திருநெல்வேலி
88.புதூர்
89.ஆரழ்வாய்மொழி
90.காஞ்சிபுரம்
91.தெரிசனங்கோப்பு
92.கன்னியாகுமரி
93.கோவில்பட்டி
94.ஏழாயிரம்பண்ணை
95.கைலாசபுரம்
96.சீவலப்பேரி
97.கோல்வார்பட்டி
98.கங்கைகொண்டான்
99.திருஅஞ்சைகளம்
100.திருதருமபுரம்
101.இலஞ்சி
102.நாகலாபுரம்
103.மேலப்புலியூர்
104.பூதப்பாண்டி
105.குலசேகரநாதர்(தென்காசி )
106. காஞ்சிபுரம்
107.ஆரழ்வாய்மொழி
108.கோவில்பட்டி
109.தெரிசனங்கோப்பு
110.ஆழ்வார்குறிச்சி
111.திருக்கருக்காவூர்
112.திருஅஞ்சைகளம்
113.விளாத்திகுளம்
114.வீரவநல்லூர்
115. வீரவநல்லூர்
116. வானரமுட்டி
117.திருக்குற்றாலம்
118.கீழ்நாட்டுக்குறிச்சி
119.கன்னியாகுமரி
120.வள்ளியூர்
121.காஞ்சிபுரம்
122.ஆரழ்வாய்மொழி
123.கோவில்பட்டி
124.திருபரப்பு
125.மணிமூர்த்தீஸ்வரம்
126.தச்சநல்லூர்
127. திருஅஞ்சைகளம்
128.மணிமூர்த்தீஸ்வரம்
129.மேல்மாந்தை
130.கோவில்பட்டி
131.அகரம்
132.செண்பகராமநல்லூர்
133.கீழ்நாட்டுகுறிச்சி
134.காஞ்சிபுரம்
135.பழனி
136.கன்னியாகுமரி
137.கோவில்பட்டி
138.திருக்கடையூர்
139.ஆழ்வார்குறிச்சி
140.திருச்செந்தூர்
141.ஆழ்வார்குறிச்சி
142.விளாத்திகுளம்
143.திருஅஞ்சைகளம்
144.கோவில்பட்டி(வள்ளுவர்நகர்)
145.சங்கானி
146.சுத்தமல்லி
147.குருமலை
148.கடம்பூர்
149.காரசேரி
150.காஞ்சிபுரம்
151.வானரமுட்டி
152.கன்னியாகுமரி
153.கோவில்பட்டி
154.மணக்கரை
155.கருங்குளம்
156.சத்திரம்(ஏழாயிரம்பண்ணை )
157.ஆவூர் பசுபதீஸ்வரம்
158.கொங்காரயக்குறிச்சி
159.குருமலை
160.உய்யகொண்டான் திருமலை(திருச்சி)
161.சிதம்பரம்
162.கடம்பூர்
163.மணிமூர்த்தீஸ்வரம்
164.காஞ்சிபுரம்
165.ஆழ்வார்குறிச்சி
166.கோவில்பட்டி
167.ஆழ்வார்குறிச்சி
168.சாத்தான்குளம்
169.கங்கைகொண்டான்
170.அகரம்
171.மாரந்தை
172.திருவாரூர்
173.திருகோடகநல்லூர்
174.கருபந்துறை
175.தென் திருபுவனம்
176.சிதம்பரம்
177.கடம்பூர்
178.திருபைஞ்சிலி
179.திருபுடைமருதூர்
180.கோவில்பட்டி
181.கல்லூர்
182.கீழ்நாட்டுகுறிச்சி
183.மணிமூர்த்திச்வரம்
184.பிரம்மதேசம்
185ஊர்காடு
186.ஆழ்வார்குறிச்சி
187.பொன்னாக்குடி
188.சேரன்மஹாதேவி
189.சிதம்பரம்
190.கடம்பூர்
191.கருபந்துறை
192.காஞ்சிபுரம்
193.மணிமூர்த்திச்வரம்
194.தென் திருபுவனம்
195.மாரந்தை
196.பசுவந்தனை
197.திருஅஞ்சைகளம்
198.அத்தாளநல்லூர
199.திருப்புகலூர்
200.தென் திருபுவனம்
201.காரசேரி
202.கடம்பூர்
203.காஞ்சிபுரம்
204.செங்கோட்டை
205.தென் திருபுவனம்
206.தேஷமாணிக்கம்
207.திருகோடகநல்லூர்
208.திருவையாறு
209.கல்லூர்
210.வீ.எம்.சத்திரம்
211.அங்கமங்கலம்

சிவப்பணிகள்

பிரதி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நலிவடைந்த திருக்கோயில்களுக்கு நாங்கள் சென்று மேற்கொள்ளும் சிவப்பணிகள்.

1.திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்பரவு செய்தல்.


2.திருக்கோயில்களில் தேவையற்ற முட்புதர்களையும்,செடி கொடிகளையும் வெட்டி அகற்றுதல்.


3.திருக்கோயில்கள் முழுவதும் வெள்ளை அடித்தல்.


4.வெளிச்சுவர்களில் காவி அடித்தல்.

5.விளக்குகள்,பாக்ஷணங்கள் போன்றவற்றை புளியிட்டு விளக்குதல்.

6.திருக்கோயில்களில் உள்ள தரையை சுத்தமான நீரைக்கொண்டு கழுவுதல்.

7.மாலையில் திருக்கோயில்களில் உள்ள அனைத்து திருமூர்த்திகளுக்கும் மாப்பொடி,மஞ்சள்பொடி,திரவியப்பொடி,பால்,தேன்,இளநீர்,எலுமிச்சை,திருநீர்,சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து,புதுவஸ்திரம் தரித்தல்.


8.பூமாலைகளைத் தொடுத்து இறைவன் திருமேனிகளுக்கு சாத்துதல்.

9.பன்னிரு திருமுறை பாடல்களை வாயினால் பக்தி பரவசத்துடன் பாடுதல்.

10.எண்ணையிட்டு திருவிளக்கு ஏற்றி,தீபஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுதல்.


சிவப்பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்......

திருப்பணி செய்யும் போது...




திருப்பணி செய்த பின் ஆலயத்தின் அமைப்பு



பல ஆலயங்களில் திருப்பணிகள் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் ......












Tuesday, June 17, 2008

அமைப்பின் நோக்கம்

"தொல்புகழ்த் தண்டமிழ் சொன்ன
அகத்தியன் சொற்கடந்து
மல்கும் இறைவன் மலரடி
கண்டு வணங்கியிங்கு
நல்கு வரநாதன் நற்குறிப்
புத்தலம் நாட்டினனால்
வெல்குவீர் வெவ்வினை பூவணர்
பொற்றாள் புகலுமினே!"

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக்கொண்டு வழிபடும் சமயம் சைவம் ஆகும்.இச்சைவம் உலகமெங்கும் பரவியுள்ளது.இது காலத்தால் தொன்மையானது.


தமிழ்நாட்டில் சிவப்பணி பலர் செய்து வருகின்றனர். திருமடங்கள்,தனி அமைப்புகள் முதலியன அப்பணியில் தலைப்படுகின்றன.ஆயினும் சைவ மக்களின் தேவையளவுக்கு அவை செயல்படவில்லை என்பது அடியோங்கள் அபிப்பிராயம்.சிவாலயங்கள் அரசின் கையிலுள்ளன,ஆகையால் அவையாவும் நிர்வாக அமைப்புகளாக மாறி வருமானம் பெருக்கும் அமைப்புகள் ஆகிவிட்டன.பல ஆலயங்களில் ஒருவேளை பூஜைகூட நடைபெறவில்லை.சில ஆலயங்களில் வருமானம் அளவுக்கதிகமாய் வருகிறது.அவ்வருமானம் சைவசமைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லை.சைவசமயத்தை இனிச் சைவமக்களே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அறமாவது அவரவர் ஆற்றலுக்கேற்ப வரைந்து கொள்வதுதானே.அம்முறையில் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருளாலும் எங்களது குருமகா சன்னிதானம் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளின் குருவருளாலும், கோவில்பட்டியில் ஸ்ரீ அப்பரடிகள் உழவாரப்பணி திருக்கூட்டம் என ஒன்றை நிறுவி மன்றத்தாராகிய யாங்கள் எம்மாற்றலுக்கேற்ப சிவபணியில் ஈடுபட்டுவருகிறோம்.

Thursday, June 12, 2008

திருஅஞ்சைக்களம் விளக்கிடும் பணி...

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம்,சுவாதி நட்சத்திரம் அன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா திருஅஞ்சைக்களத்தில் சிறப்பாக நடைபெறும்.அந்நாளில் எங்கள் அமைப்பில் இருந்து காலையில் விளக்குகள் அனைத்தையும் சுத்தம் செய்து,மாலையில் திருவிளக்கு ஏற்றி வழிபடுவோம்...


பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்........



காலையில் திருவிளக்குகளை சுத்தம் செய்யும் பொழுது.....




விளக்கு ஏற்றுவதற்காக தயார் நிலையில் இருக்கும் எண்ணை டின்கள்..



மாலையில் திருவிளாக்கிடும் போது....





திருவிளக்கு ஏற்றிய பின்....