Tuesday, June 17, 2008

அமைப்பின் நோக்கம்

"தொல்புகழ்த் தண்டமிழ் சொன்ன
அகத்தியன் சொற்கடந்து
மல்கும் இறைவன் மலரடி
கண்டு வணங்கியிங்கு
நல்கு வரநாதன் நற்குறிப்
புத்தலம் நாட்டினனால்
வெல்குவீர் வெவ்வினை பூவணர்
பொற்றாள் புகலுமினே!"

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக்கொண்டு வழிபடும் சமயம் சைவம் ஆகும்.இச்சைவம் உலகமெங்கும் பரவியுள்ளது.இது காலத்தால் தொன்மையானது.


தமிழ்நாட்டில் சிவப்பணி பலர் செய்து வருகின்றனர். திருமடங்கள்,தனி அமைப்புகள் முதலியன அப்பணியில் தலைப்படுகின்றன.ஆயினும் சைவ மக்களின் தேவையளவுக்கு அவை செயல்படவில்லை என்பது அடியோங்கள் அபிப்பிராயம்.சிவாலயங்கள் அரசின் கையிலுள்ளன,ஆகையால் அவையாவும் நிர்வாக அமைப்புகளாக மாறி வருமானம் பெருக்கும் அமைப்புகள் ஆகிவிட்டன.பல ஆலயங்களில் ஒருவேளை பூஜைகூட நடைபெறவில்லை.சில ஆலயங்களில் வருமானம் அளவுக்கதிகமாய் வருகிறது.அவ்வருமானம் சைவசமைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லை.சைவசமயத்தை இனிச் சைவமக்களே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அறமாவது அவரவர் ஆற்றலுக்கேற்ப வரைந்து கொள்வதுதானே.அம்முறையில் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருளாலும் எங்களது குருமகா சன்னிதானம் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளின் குருவருளாலும், கோவில்பட்டியில் ஸ்ரீ அப்பரடிகள் உழவாரப்பணி திருக்கூட்டம் என ஒன்றை நிறுவி மன்றத்தாராகிய யாங்கள் எம்மாற்றலுக்கேற்ப சிவபணியில் ஈடுபட்டுவருகிறோம்.

No comments: